Saturday, August 29, 2015
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை சந்தித்து குறை கேட்பு!!
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்
பேராசிரியர் அவர்கள் தொகுதி ஆய்வின்போது பொதுமக்களை சந்தித்து குறைகளை
கேட்டறிந்தார்கள் !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி ஆய்வு நடைபெற்றது .
அதுசமயம் பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி வெளிப்பட்டணம் 15 வது வார்டில் உள்ள கொல்லன் பட்டறைத்தெரு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும்
கழிவுநீரை அகற்றவும் தெரு முனையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை
இடம்மாற்றக்கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கைமனு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை
எடுப்பதாக கூறப்பட்டது.
இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்
சகோ.B.அன்வர் அலி. மாநில தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது சித்திக், மூத்த நிர்வாகி பாக்கர் அலி, செயலாளர் பிஸ்மி,
மாணவரணி செயலாளர் புர்க்கான் அலி, மன்சூர்,
சக்கரக்கோட்டை ருகைபு, ஆற்றங்கரை மமக செயலாளர்
சகோ.நூருல் அஃப்பான் நகர் கிளை நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரின் செயலாளர் தாஹிர்
சைபுதீன் உடன் இருந்தனர்.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment