Saturday, August 29, 2015
சிறுபான்மையின மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை!!
சிறுபான்மையின பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற
விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வியில் சிறந்து விளங்கும் வசதியின்றி கல்வியினைத் தொடர சிரமப்படும் சிறுபான்மை
சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்
தொகை திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில்
வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டிற்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கு தமிழகத்திற்கு
1,707 சிறுபான்மை
மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதிகள்:
10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பு கல்வி ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.
சேர்க்கை
அனுமதிச்சீட்டு கடித நகல் இணைக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வருமானச்
சான்று அல்லது ஓய்வூதியம் ஆணை அல்லது ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம்
அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
தாங்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விபரங்கள் www.maef.nic.in
என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்து விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விபரங்களை அனுப்பி வைக்க
வேண்டும்.
கல்வி நிலைய தலைமையாசிரியர் அல்லது தாளாளர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து பெற்று அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப் படிவம், பிற்சேர்க்கை 1, 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றின் அசல் ஆகியவற்றுடன்
கல்வி நிலைய தலைமையாசிரியர் அல்லது தாளாளர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து பெற்று அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப் படிவம், பிற்சேர்க்கை 1, 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றின் அசல் ஆகியவற்றுடன்
‘‘செயலாளர், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை,
செல்ம்ஸ் போர்ட் ரோடு,
புதுடில்லி-110055’’
என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு
கலெக்டர் தெரிவித்துள்ளார்.
செய்தி: தினசரிகள்
No comments :
Post a Comment