(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 26, 2015

சவூதி நண்பர்கள் கவனத்திற்கு, முறையான அரசாங்க அனுமதியின்றி ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்டால் அபராதமும், சிறைதண்டனையும்!!

No comments :
சவுதியில் வேலை செய்து வருவோர் குறைந்த செலவுதானே என்பதால் ஒவ்வொருவரும் நான்கு முறை ஐந்து முறை ஹஜ் செய்கிறார்கள். இதை பெருமையாக வெளியில் சொல்லவும் செய்கிறார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான் அரசு அனுமதிக்கும் என்பதால் ஆர்வமிகுதியால் சிலர் அரசு அனுமதியின்றி ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடன் இல்லாமல் வசதியுடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும். அதை விடுத்து அரசுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக குறைந்த பணத்தைக் கொடுத்து கள்ளத்தனமாக வண்டிகளில் ஏறி ஹஜ் பயணம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு உதவி செய்பவர்களுக்கும் ரூம் அமைத்து கூடாரம் அடித்துக் கொடுப்பவர்களுக்கும் சவுதி அரசு 100000 ரியால் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையையும் கொடுக்கிறது. இந்த வருடம் இதனை கடுமையாக அமுல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு கள்ளத்தனமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பலருக்கு சிரமத்தை கொடுக்கிறோம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். வெளிநாட்டு ஹஜ் பயணிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல நாள் சிரமப்பட்டு வருகின்றனர். சவுதி அரசு பல நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையே ஒதுக்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு. கழிவறைக்கு பிரச்னை, குடி தண்ணீருக்கு பிரச்னை, கஃபாவை வலம் வரும் போதும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.


ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் கூடும் போது எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மேற்கொண்டும் கள்ளத் தனமாக லட்சக் கணக்கில் மக்கள் கூடினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.

தகவல் பகிர்வு: சவுதிகெஜட்

No comments :

Post a Comment