(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 24, 2015

பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் இடிந்து விழும் நிலையில் கடைகள், செப்பனிட கோரிக்கை!!

No comments :
பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால்  ஊராட்சிக்கு சொந்தமான கடைகள் இடிந்து விழுகின்றன.  பரமக்குடி அருகே பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான 6 கடைகள்  உள்ளன. இக்கடைகள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த கடைகள் வெளிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வாடகைப்பணம் ஊராட்சி நிதியில் சேர்க்கப்பட்டது. நாளடைவில் கட்டிடங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாத காரணத்தில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டன. 


எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தற்போது கடைகள் அனைத்தும் உள்ளது.  இதனால் சிலர் கடையை காலி செய்து விட்டனர். ஒரு சிலர் பழைய பேப்பர், கரி மூடைகள் அடுக்கி வைக்கும் குடோனாக மாற்றியுள்ளனர். உரிய பராமரிப்பு இல்லாததால் பல லட்சங்கள் செலவில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் தற்போது பயனின்றி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் கடைகளை மராமத்து பணிகள் மேற்கொண்டால் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

இதுகுறித்து கடை வியாபாரிகள் கூறுகையில், “கடைகள் இடிந்து விழுவதால் யாரும் நிரந்தரமாக கடைகளில் தங்க முடியவில்லை. கடை நிலைமையை பார்த்து பொதுமக்களும் கடைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். பல வருடங்களாக கடைகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் கடையின் உள்ளே அனைத்து பகுதியும் சேதமாகி உள்ளது.  மாற்று ஏற்பாடுகள் செய்தால்தான் கடைகளில் தங்கி வியாபாரம் செய்ய முடியும்என்று கூறினர்.

செய்தி: தினகரன்

No comments :

Post a Comment