(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 1, 2015

கீழக்கரையில் ஜனாஸா தொழுகை, இராமேஸ்வரம் கோவிலில் மோட்ச தீபம், இரு காரியங்களும் ஒருவருக்காகவே, அவரே அப்துல் கலாம்!!

No comments :
கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்குபின் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல் கலாம் மறைவிற்காக காயிப் ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்கு முன் டவுன் காஜியும் ஜும்ஆ மஸ்ஜிதின் மஹல்லி - முதவல்லியுமான மவ்லவி காஜி A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் சித்தீகி அவர்கள் நிகழ்த்திய இரங்கல் உரையில் உங்களில் மரணித்தவர்களின் நல்லவற்றை நினைவு கூறுங்கள் என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப் படி நாம் மறைந்த 11வது இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் பற்றி நினைவு கூற வேண்டும்.

அவர் நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக நாட்டின் பாதுகாப்பிற்காக இளைஞர்களின் நல்வாழ்விற்காக மாணவர்களின் நல்ல எதிர்காலத்திற்காக செய்த சேவைகள் காலமெல்லாம் நிலைத்து நிற்கும் அளவில் வரலாறாக அமைந்துவிட்டது.

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அன்று மாலை ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில், கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள்  ககாரின்ராஜ், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கண்ணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், அலுவலர் மாரியப்பன், கோயில் குருக்கள், பாஜக தேசியக் குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

No comments :

Post a Comment