(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 6, 2015

இராமநாதபுர மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ உடல் தகுதி தேர்வில் 93 பேர் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்!!

No comments :
தமிழக போலீசில் காலியாக உள்ள 984, நிரப்பப்படாமல் உள்ள 94 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 23, 24 ல் நடந்தது. தேர்வு முடிவுப்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பிரிவில் தேறிய 142 ஆண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. அதில் 96 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

பொதுப்பிரிவில் தேர்வான 42 பெண்கள், போலீசில் இட ஒதுக்கீட்டில் தேர்வான 48 ஆண், பெண்களுக்கு நடந்த உடல் தகுதி தேர்வில் 39 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுப்பிரிவில் 96 ஆண்கள், 36 பெண்களுக்கான உயரம் அல்லது நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், கிரிக்கெட் பந்து எறிதல் போட்டிகள் நேற்று நடந்தன.


96 ஆண்களில் ஒருவர் வரவில்லை. கயிறு ஏறுதலில் 42 பேர், 100 மீ., ஓட்டத்தில் 3 பேர் தகுதி இழந்து 50 பேர் தேறினர். 36 பெண்களில் நீளம் தாண்டுதலில் 23 பேர் , ஓட்டத்தில் 9 பேர் தகுதி இழந்து 4 பேர் தேறினர். பொதுப்பிரிவில் 50 ஆண், 4 பெண், போலீஸ் ஒதுக்கீட்டில் 15 பெண், 24 ஆண் என 93 பேர் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

போலீஸ் ஒதுக்கீட்டில் இறுதி வாய்ப்பில் பங்கேற்று எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த போலீசார் சிலர் 1,500 மீ., ஓட்டத்தில் சில வினாடிகளில் தகுதி இழந்ததால் வேதனை அடைந்தனர். ஐ.ஜி., அபய்குமார் சிங், டி.ஐ.ஜி (பொறுப்பு) அறிவுச்செல்வம், எஸ்.பி., மயில்வாகனன், கூடுதல் எஸ்.பி.,க்கள் வெள்ளைத்துரை, ரஞ்சிதா பண்டே ஆகியோர் கண்காணித்தனர்.

செய்தி: தினசரிகள்


No comments :

Post a Comment