(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 30, 2015

ஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இட ஆக்கிரமிப்பு விவகாரம், 6 வார காலத்துக்குள் வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

No comments :
ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் அபகரித்தது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை 6 வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள முகைதீன ஆண்டவர் பள்ளிவாசலுக்கு காலி இடத்தை, கடந்த 31.5.1999 இல் அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகி சீனிப்புலவர், அம்பலம் சீனிமுகம்மது, மல்லாரி முகைதீன் அபுபக்கர், பாவா பக்ருதீன் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்த ஷாஷகான் மனைவி மகபூபாவும் மற்றும் ராமநாதபுரம் பட்டினம்காத்தானைச் சேர்ந்த முகம்மது யூசுப் மனைவி சலிகா பீவியும் தானம் செய்துள்ளனர்.


அந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அப்துல் சுக்கூர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த சீனிமுகம்மது மகன் அன்வர் (60) என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராமநாதபுரம வக்பு வாரிய செயலருக்கும், திருவாடானை வட்டாசியருக்கும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 

எனவே அவர், மதுரை உயர் நீமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 6 வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சென்னை வக்பு வாரிய முதன்மைச் செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், திருவாடானை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)


No comments :

Post a Comment