Wednesday, July 8, 2015
ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் கெளரிசங்கரிக்கு பரமக்குடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!!
சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம்
பதக்கம் வென்று திரும்பிய பரமக்குடி பள்ளி மாணவிக்கு, செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரமக்குடி குத்துக்கல் தெருவில் வசிக்கும்
ஜெயமூர்த்தி-தனலெட்சுமி தம்பதியின் மகள் கெüரிசங்கரி. இவர், செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
பள்ளிகள் அளவில் மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் சாதனை படைத்துள்ள இம்மாணவி, ஆசிய அளவில் சீனாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி
சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 29 ஆம் தேதி சீனாவில்
நடந்த போட்டியில்,
குண்டு எறிதலில் 13.82 மீட்டர் தூரம்
எறிந்து இம்மாணவி சாதனை படைத்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய இம்மாணவிக்கு, பரமக்குடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், மாணவியின் பெற்றோர்,
பயிற்சியாளர் எஸ். சரவணன்சுதர்சன் மற்றும் மாவட்ட கபடி
கழகச் செயலர் ஜெயக்குமார்,
கூடைப் பந்தாட்ட கழக நிர்வாகிகள் வேலவன், சரவணன்,
உடற்கல்வி இயக்குநர்கள் தமிழரசு, ரீட்டா,
தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலர் சி. பசுமலை மற்றும்
பொதுநல அமைப்பினர் என பலரும் மாணவிக்கு மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் வரவேற்றனர்.
பின்னர், மாணவியை ரயில்
நிலையத்திலிருந்து அவரது இல்லம் வரை, மேள தாளங்கள் முழங்க
பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சாதனை படைத்த மாணவி கெüரிசங்கரி செய்தியாளர்களிடம் கூறியது: பின்தங்கிய ராமநாதபுரம்
மாவட்டத்திலிருந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம்
வென்றதுடன்,
முந்தைய சாதனையை முறியடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு ஊக்கமளித்த எனது பெற்றோர், பயிற்சியாளர் சுதர்சன், பள்ளித் தாளாளர் டி.எஸ். ராஜாராம், தலைமையாசிரியர் எம்.எஸ்.
நாகராஜன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு தேவையான உதவி செய்தால், மேலும் பல சாதனைகள் புரிவதுடன், என்னைப் போன்று பலரையும்
திறமையானவர்களாக உருவாக்குவேன் என்றார்
செய்தி:
தினமணி
No comments :
Post a Comment