Monday, July 6, 2015
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய கூடுதல் இடம் வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம்!!
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கூடுதல் இடம் வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு (2015) ஹஜ் பயணம் மேற்கொள்ள 15,032 பேர் ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 2,585 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
ஹஜ் 2015 வழிகாட்டு விதிமுறைகளின்படி முன்பதிவு அடிப்படையில் 1699 ஹஜ் பயணிகள் தேர்வானார்கள். பொதுப்பிரிவில் 886 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மற்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் பயணம் செல்ல முடிந்தது. 2013-ம் ஆண்டு 3,696 பேரும், 2014-ம் ஆண்டு 2,858 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
செய்தி: இன் இண்டியா
No comments :
Post a Comment