Monday, July 6, 2015
மண்டபம் மீனவர் காலனியில் நியாயவிலைக்கடை துணை சேவை மையம் திறப்பு!!
மண்டபம் மீனவர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் செலவில் நியாயவிலைக்கடை துணை சேவை மையம் பேரா.Dr.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்கள் ! !
மண்டபம் மீனவர் காலனியில் ரூ.6 லட்சம் செலவில் ரேஷன்கடை துணை சேவை மையத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரை அடுத்துள்ள மீனவர் காலனியில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரேஷன்கடை துணை சேவை மையம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் தலைமை தாங்கினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் பேரூராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் சகோ.ம.மைதீன் வரவேற்புரையாற்றினார்,
விழாவில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை பேராசிரியர்.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் திறந்து வைத்து பேசியதாவது:–
மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீனவர் காலனியில் வசிக்கும் மக்கள் என்னை சந்தித்து ரேஷன்கடைக்கு தனி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதன்மூலம் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் சிரமம் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மண்டபம் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ஏற்கனவே 5–வது வார்டில் ரூ.5 லட்சம் செலவில் நவீன கழிப்பறை கட்டிடம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரூ.6லட்சம் செலவில் தார்ச்சாலை, ரூ.6 லட்சத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் என பல்வேறு பணிகள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர வடக்கு கடற்கரை பகுதியை ஆழப்படுத்தவும் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். உங்கள் கோரிக்கையை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று தனது உரையில் குறிப்பிட்டார்கள். கூட்ட முடிவில் பொதுமக்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மண்டபம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள்
மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர்அலி, மூத்த நிர்வாகி சகோ.பாக்கர் அலி, மண்டபம் மகமூது, சட்டமன்ற உறுப்பினரின் நேரடி செயலாளர் சகோ.தாஹிர் சைபுதீன்,
ஆற்றங்கரை கிளை செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் மற்றும் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
No comments :
Post a Comment