Wednesday, July 1, 2015
பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை!!
பரமக்குடி மாணவி ஆசியஅளவில் சாதனை படைத்துள்ளார். அவர்
குண்டு எறிதலில் முந்திய சாதனையை முறியடித்தார்.
ஆசிய போட்டி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகள் கவுரிசங்கரி. இவர் பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் குண்டு எறிதல் போட்டியில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை குவித்துள்ளார்.

இந்தநிலையில் சீனாவில் நடந்துவரும் ஆசிய தடகள போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் கவுரிசங்கரி கலந்து கொண்டார். இந்த போட்டியில் இவர் 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் குண்டு எறிதலில் ஏற்கனவே மும்பையை சேர்ந்த மேகனா என்பவரது 12.91 மீட்டர் தூர சாதனையை முறியடித்து ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவி கவுரிசங்கரிக்கு வருகிற 2-ந்தேதி தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
வாழ்த்து:
இந்த சாதனை குறித்து மாணவி கவுரிசங்கரி சீனாவில் இருந்து செல்போன் மூலம் பரமக்குடியில் உள்ள அவருடைய பெற்றோர் குருமூர்த்தி- தனலெட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதனை மாணவி கவுரி சங்கரிக்கும், அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் பரமக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சரவண சுதர்ச னுக்கும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டுத் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி: தினத்தந்தி
No comments :
Post a Comment