Thursday, July 2, 2015
60 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கும் டி.சி.எஸ்!!
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ்.
புதிதாக 60
ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி
என்.சந்திரசேகரன் இதுபற்றி கூறும்போது, "இந்த நிதி ஆண்டில் ஏற்கனவே வேலைப்பார்த்து கொண்டிருக்கும் ஒரு லட்சம் பேருக்கு
புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்
புதிதாக 60
ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல பணியாளர்களில் 14.9 சதவீதம் பேர் வேறு நிறுவனங்களுக்கு செல்வது பற்றி அவரிடம் கேட்டபோது, "இது இயல்பான விஷயம் தான். மேலும் இது மென்பொருள் துறை சிறப்பாக இருப்பதையே
காட்டுகிறது" என தெரிவித்தார். அதேபோல் இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3.14 லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேர் பெண் ஊழியர்கள். இவர்களில் சராசரியாக 15.4 சதவீதம் பேர் பாதியில் வேலையை விட்டு விலகுவதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: நக்கீரன்
No comments :
Post a Comment