(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 26, 2015

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.53 லட்சம் மதிப்பிலான புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவு!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.53 லட்சம் மதிப்பிலான புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவினை அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

அடிப்படை வசதி:

ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புதிதாக ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரத்த பகுப்பாய்வு பிரிவினை பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா முன்னிலையில் அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரிக்கு இணையான ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக இந்த ஆஸ்பத்திரியில் ரத்தம் பகுப்பாய்வு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த பகுப்பாய்வுப் பிரிவில் தளவாட சாமான்களுக்காக ரூ.50 லட்சமும், உள்கட்டமைப்பிற்காக ரூ. 3 லட்சமும் ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.53 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு கொடையாளியிடம் இருந்து பெறும் 350 மி.லி ரத்தத்தின் மூலம் 3 நோயாளிகளின் உயிரை காக்கமுடியும். இந்த ரத்த வங்கியில் ரத்தம் மட்டுமல்லாமல் ரத்தத்தின் கூறுகளான சிவப்பணுக்கள், ரத்தத்தட்டு அணுக்கள் மற்றும் ரத்த வடிநீர் தனித்தனியாக கிடைக்கும். 


இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட சிவப்பணுக்களால் ரத்தசோகை, சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பேறுகால ரத்த இழப்பு போன்ற நோய்களுக்கும், ரத்த தட்டு அணுக்களால் ரத்தப்போக்கு அதிகமாக உள்ள நோயாளிகளும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள், ரத்த வடிநீர் உபயோகத்தால் தீக்காயம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், புரத குறைபாடு உள்ள நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், பாம்புக்கடி நோயாளிகள் மற்றும் ரத்தப்போக்கு நோயாளிகளும் பயன்பெறுவார்கள். இந்த பிரிவிற்கென நமது மருத்துவர்களும், ஆய்வக உதவியாளர்களும் ஒரு மாதம் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சி ஏற்பாடு:

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, அவைத்தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகரசபை தலைவர்கள் சந்தானலெட்சுமி,அர்ச்சுனன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வரதன், மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ், கண்காணிப்பாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஜவஹர்லால், ரத்தவங்கி மருத்துவர் டாக்டர் ஷேக்அப்துல்லா, சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாதிக்அலி, உதவி செயற்பொறியாளர் ஜெயதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக ரத்த பகுப்பாய்வு எந்திர தெடாக்கவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் கீழக் கரை முகமது சதக் பாலி டெக்னிக் மாணவர்கள் 50 பேர் ரத்ததானம் செய்தனர். ரோட்ராக்ட் பொறுப்பாசி ரியர் பாலசுப்பிர மணியன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா மற்றும் ரத்ததான முகாம் அமைப்பின் ஆசிரியர் அய்யப்பன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment