Tuesday, July 14, 2015
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் செலவில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு!!
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேவர் பிளாக் சாலையை மக்களவை
உறுப்பினர் அ.அன்வர்ராஜா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தின் உள்புறத்தில் எம்.பி.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில்
பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்நிதியிலிருந்து கால்வாய் அமைத்து
மழைநீர் சேமிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பேவர் பிளாக் சாலையையும், பிற வளர்ச்சிப் பணிகளையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ்.சந்தானலெட்சுமி, மருத்துவமனை கணகாணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலர் சாதிக்அலி, பட்டினம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா மருது, மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர் கே.சி.வரதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள்
பலரும் உடன் வந்திருந்தனர். பின்னர் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா கூறியதாவது:
தற்போது மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.40 லட்சம் மதிப்பில்
பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ரூ.40 லட்சம் செலவில்
தரமான பேவர் பிளாக் சாலை மீதமுள்ள இடங்களிலும் போடப்படும். 100 படுக்கைகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஒப்பந்த காலத்துக்கு முன்னதாக கட்டி
முடிக்கப்பட்டு,
அதில் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட
குளிரூட்டும் வசதியுடன் தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர மேலும் பல சிறப்பு பிரிவுகளுக்கான புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு
வருகின்றன. இவையனைத்தும் 2016
ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment