Thursday, July 16, 2015
ஸ்பைஸ்ஜெட் விமான டிக்கெட் 1 ரூபாய் விலையில் விற்பனை!!
மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் வாடிக்கையாளர்
எண்ணிக்கையை உயர்த்தவும்,
சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை
அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 1 லட்சம் டிக்கெட்களை 1 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இச்சலுகையைப் பெற விமானப் பயணிகள் தங்களது பயணத்தை ஜூலை 15, 2015 முதல் மார்ச் 31,2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முடிவு செய்ய வேண்டும்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்-களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையச் செய்யவும், அதிகளவில் பதிவிறக்கம் செய்யத் திட்டமிட்டே 1 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்-களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையச் செய்யவும், அதிகளவில் பதிவிறக்கம் செய்யத் திட்டமிட்டே 1 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.
இச்சலுகையில் அறிவிக்கப்பட்ட 1,00,000 டிக்கெட்டுகள் அடுத்த 3 நாட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. 1 ரூபாய் சலுகை என்பது, வரி மற்றும் கட்டணங்கள் இல்லாமல் அளிக்கப்படும் கட்டணம்.
மேலும் 1 ரூபாய் சலுகை பெற பயணிகள் இரு வழிசேவையில் டிக்கெட்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கட்டண சலுகை ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும்.
நிதி நெக்கடி பிரச்சனையில் இருந்து வெளிவரப் போராடும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இத்தகைய சலுகை விற்பனை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சஞ்சீவ் கபூர், "நிறுவனத்தில் நிதி நெருக்கடி பிரச்சனை எதுமில்லை, இச்சலுகை மொபைல் ஆப்பை பிரபலப்படுத்த மட்டுமே அளித்துள்ளது. இதனால் நிறுவனத்திற்க நஷ்டம் ஏதும் வராது" எனத் தெரிவித்தார். இவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
இச்சலுகையில் விற்பனை செய்யப்படும் டிக்கெடுகளின் கட்டணங்கள் திரும்பப்பெற இயலாது இதை மனதில் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
செய்தி: ஒன் இண்டியா
No comments :
Post a Comment