(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 1, 2015

குவைத், UAE உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் “MID DAY BREAK” விதி அமலுக்கு வருகிறது.!!

No comments :
குவைத், UAE உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெயிளின் தாக்கத்தை முன்னிட்டு “MID DAY BREAK” விதி அமலுக்கு வருகிறது.

குவைத் அரசு இன்று முதல் (ஜுன் முதல் தேதியில் இருந்து )
ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை குவைத்தில்
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மீறி வேலை பார்க்க அழைத்து செல்லும் நிறுவனத்திற்கோ அல்லது வேலை பார்க்கும் தொழிலாளருக்கு அபதாரம் விதிக்கப்படும் என குவைத் அரசு கூறி உள்ளது.

இதே போல், அமீரகத்தில்

ஜுன் மாதம் 15-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயிலின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட்டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்குமாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது. 




கடந்த 11 ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு அளிக்கப்பட வேண்டிய நேரத்தில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் 50 ஆயிரம் திர்ஹம் அவரை அபராதம் விதிக்கப்படுவதுடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என ஐக்கிய அரபு அமீரக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments :

Post a Comment