Sunday, June 7, 2015
கடத்தப்பட்ட கீழக்கரை தனியார் பள்ளி மாணவி மீட்பு, கடத்திய வாலிபர் கைது!!
கீழக்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது ஒரு ஆட்டோ வேகமாக வந்தது.அதில் வந்த ‘மர்ம’ ஆசாமி மாணவியை திடீரென ஆட்டோவுக்குள் இழுத்து போட்டு கடத்தி சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்
இதன் பலனாக உத்தரகோச மங்கை அருகே அந்த ஆட்டோ மடக்கி பிடிக்கப்பட்டது. அதில் இருந்த மாணவியும் மீட்கப்பட்டார்.அவரை கடத்தியதாக சின்னமாயாகுளம் கிராமம் பாரதிநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன் தாஸ் (வயது23) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அதிரடியாக செயல்பட்டு மாணவியை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
செய்தி: மாலைமலர்
No comments :
Post a Comment