Thursday, June 25, 2015
ஜூலை முதல் வாரம் சென்னை மெட்ரோ ரயில் - கட்டண விபரம் !!
சென்னை மெட்ரோ ரயில் ஜூலை முதல் வாரம் தன் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மெட்ரோ ரயில் கட்டணம் பற்றிய தகவலை விகடன் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழ் வருமாறு:
சென்னையில் 2
கிலோ மீட்டர் முதல் 24 கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் செய்யும் கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு 13 ரூபாயும், 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும், 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு 17 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 15 கிலோ மீட்டருக்கு 19 ரூபாயும், 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு 20 ரூபாயும், 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.21, 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.22, 24 கிலோ மீட்டருக்கு மேல் 24 ரூபாயும், 27 கிலோ மீட்டருக்கு 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை அமல்படுத்துவதா? அல்லது மாற்றியமைப்பதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விகடன்
No comments :
Post a Comment