Thursday, June 25, 2015
கீழக்கரையில் அமைதி பேச்சுவார்த்தையையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தி வைப்பு!!
கீழக்கரையில் அமைதி பேச்சுவார்த்தையையடுத்து
அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தி வைப்பு!!
கீழக்கரையில் நகராட்சியில் சேர்மனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும்
அவருடைய கணவரை கண்டித்தும் இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தி
வைத்தனர் அனைத்து கட்சியினர்.
இன்று நடந்த இந்த அமைதி பேச்சு
வார்த்தையில்,
கீழக்கரை தாலுகா வாட்டாச்சியர் திருமதி. கமலா
அவர்களும்
தாசில்தார் திரு. தமீம் அவர்களும் மற்றும் கீ
ழக்கரை காவல் துறை துணை ஆய்வாளர் திரு.சிவ சுப்புரமணி
அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
அப்போது சர்வ கட்சியின் கோரிக்கைகளை கனிவுடன் ஏற்று அவர் எழுத்துப் பூர்வமாக எழுதியும் தந்ததால் அனைத்து கட்சியினர் சமாதானம்
அடைந்தனர்.
தீர்மானங்கள்:
1)ஊழல்லுக்கு துணைப் போகாத நகராட்சி ஆணையர் அவர்களை பணி இடம் தற்ப்போது மாற்றக் கூடாது.
2)சேர்மன் அவர்களின் காணவர் அவர்கள் நகராட்சியின் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் நகராட்சி அலுவகத்திற்க்குள் அதிகாரம் செய்யக் கூடாது.
3)நகராட்சிக்கு நலத் திட்டத்திற்காக வந்த சுமார் 16 கோடி ரூபாய் முறையாக எந்த நலத் திட்டங்களும் நிறை வேற இல்லை இதனால் பல கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள் இதற்க்கு தனியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு விசாரனை குழு அமைத்து விசாரனைகள் தொடங்க வேண்டும்.
4)நகராட்சியில் உள்ள கலியாக இருக்கும் பெறியாளர் பதவி மற்றும் அலுவலக பணிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்ட வேண்டும்.
கோரிக்கைகள் தவறும் பட்சத்தில் மக்களைத்திரட்டி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெரும் என்று அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
செய்தி: திரு.முஜீபுர்ரஹ்மான், SDPI கீழக்கரை
No comments :
Post a Comment