(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 21, 2015

தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் ஐந்து லட்சம் செலவில் புதிய கழிப்பறைகள் திறப்பு நிகழ்வு ! !

No comments :
தங்கச்சிமடம் ஊராட்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கழிப்பறைகள் கட்டிடம் ரூபாய்.5.00 ஐந்து லட்சம் செலவில் திறப்பு நிகழ்வு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சி, தங்கச்சிமடம் கிராமத்தில் புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( தரம் உயர்த்தப்பட்டுள்ளது )

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் மூலம் ரூ.ஐந்து லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பத்து கழிப்பறைகள் மற்றும் பத்து சிறுநீர் பிறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் திறந்து வைத்தார்கள்.





இந்த நிகழ்வில் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஞானசீலன் அவர்களும், தங்கச்சிமடம் மீனவ பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சகோதரி.ஆரோக்கியமேரி அவர்களும்
இப்பள்ளியின் தாளாளர் சகோதரி.வ.பிலோமினா அவர்களும், தலைமை ஆசிரியை சகோதரி.சு.மனோகரி அவர்களும் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள் மேலும்
மனிதநேய மக்கள்கட்சியின் தென் மண்டல தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது சித்திக் அவர்களும், மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி அவர்களும், மமக பகுதி பொறுப்பாளர் சகோ.இன்னாசி லடீஸ் அவர்களும்
ஆற்றாங்கரை கிளை செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் தங்கச்சிமடம் சகோ.ஆஸிக் உட்பட கிளை நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் அங்குள்ள ஆசிரியை அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி கூறினார்.

செய்தி: இராபநாதபுர MLA அலுவலகம்

No comments :

Post a Comment