(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 24, 2015

ராமநாதபுரம் மாவட்ட இ-சேவை மையங்களில் தேவையான சான்றிழ்களை பெறலாம்!!

No comments :
பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சான்றிழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கேபிள் டி.வி. துணை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இ-சேவை மையம்:

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. துணை மேலாளர் ராமன் கூறியுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ராமநாதபுரமராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி மற்றும் கடலாடி தாலுகா அலுவலங்களில் அரசு பொது இ-சேவை மையம் தொடங்கப்பட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொது இ-சேவை மையங்கள் மூலம் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பொது இ-சேவை மையங்கள் மூலம் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலு£ர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்¢பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் போன்றவற்றுக்கு மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்¢கப்பட்டு வருகிறது. 



அலைச்சல் தவிர்ப்பு:

மேலும் இந்த பொது இ-சேவை மையங்கள் மூலம் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு பெறுவதற்¢கு விண்ணப்பம் செய்வதற்கும், தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும், பாஸ்போர்ட்டு பெறுவதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தொகை செலுத்துவதற்கும் தற்போது இ-சேவை மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகம் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று சான்றிதழ்களை பெற தனித்தனியே அலைவது முற்றிலும் தவிர்க்கப்படும். தாலுகா அலுவலக தலைமை இடத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொது இ-சேவை மையங்களில் குடும்ப அட்டை உள்ளிட்ட தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட பிறகு ஆன்லைன் மூலமாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மற்றும் உரிய துறை அலுவலர்களின் ஒப்புதலுடன் சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்படுகிறது. விண்ணப்¢பித்தவர்களின் சான்று தயாரானவுடன் அவர்களது செல்போனிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இத்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் விண்ணப்பதாரர்கள் இந்த மையத்தில் உரிய சான்றினை பெற்றுக்கொள்ளலாம்¢. 

மின்னணு:

இதன் காரணமாக மக்களுக்கு தேவையான சான்றுகளை ஒரே இடத்தில் விண்ணப்பித்து அங்கேயே அதனைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்த பொது இ - சேவை மையங்களின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், திருமண நிதி உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் என ஏறக்குறைய 20,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து அனைவருக்கும் உரிய சான்றி தழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதர மனுக்களும் மின்னணு மூலம் வழங்கிடும் நடவடிக்கையில் உள்ளது.

மேலும் இந்த மையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் வழங்கப்படுகின்றது. இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோல ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ரூ.30 செலுத்தி ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இந்த மையங்கள் ஞாயிற்றுக் கிழமை மற்றும் இதர அரசு விடுமுறைகள் தவிர மற்ற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment