(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 23, 2015

திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டிடம் திறப்பு விழா!!

No comments :
திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.10.00 (பத்து லட்சம்) செலவில் முஸ்லிம் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டிடம் திறப்பு நிகழ்வு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிராங்குடியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.பத்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் துவக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது அவ்வூரில் இந்த ஆண்டு தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்த மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணாக்கர்களை பாராட்டி நினைவுப்பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.



ஊர் பொதுமக்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துசென்று அரசின் கல்வி நிறுவனங்களுக்கான நிதிமூலம் கட்டித்தர வழிவகை செய்யப்படும் என்றார்கள்.

நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி இந்து மயானங்களுக்கும், கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களுக்கும், முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் போன்றவைகளுக்காக இந்த பகுதியில் பல்வேறு ஊர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த பகுதியான திருப்புல்லாணி ஒன்றியத்தில் மயான கட்டுமானப்பணிகளுக்காக மட்டும் ரெகுநாதபுரத்திற்கு நான்கு லட்சமும், மோர்குளத்திற்கு ஆறு லட்சமும், கும்பிடுமதுரைக்கு மூன்று லட்சமும், திருப்புல்லாணிக்கு ஐந்து லட்சமும், ஆழ்வார்தோட்டத்திற்கு இரண்டு லட்சமும், புதுக்கோவிலுக்கு ஒன்றரை லட்சமுமாக இப்பொழுது காஞ்சிராங்குடியையும் சேர்த்து மொத்தம் 31.5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் இந்த பகுதியில் கீழக்கரை நகராட்சியில் பள்ளிக்கூட கட்டிடங்களுக்காக சுமார் 15 லட்சமும் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்றத்தலைவர் சகோதரி.திருமதி.காளிமுத்து ஆதித்தன் அவர்களும், காஞ்சிராங்குடி முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிதியை ஒதுக்கித்தரக்கோரி பெரும் முயற்சி எடுத்த காஞ்சிராங்குடி ஊராட்சி மன்ற உறுப்பினரும் அமைப்பு நிர்வாகியுமான சகோ.இப்ராகிம் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

No comments :

Post a Comment