(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 2, 2015

குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் சாலை வசதி கோரி மாற்றுத்திறனாளி மனு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந் தும் ஏராளமான பொதுமக் கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். 

ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம் பதிகளான அப்துல் ரஹீம், சப்ராபானு ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:உடல் ஊனமுற்று நடக்க முடியாத எங்களுக்கு ஊரில் உள்ள சமுதாய அமைப்பினர் உதவி செய்து 3 சக்கர வாகனம் வழங்கி உள்ளனர். இதன்மூலம் தான் நாங்கள் இருவரும் சென்று வருகிறோம். நான் சைக்கிள் பழுது நீக்கும் தொழிலும், எனது மனைவி தையல் பயிற் சியும் அளித்து வருகிறார்.

சாலை வசதி:


வறுமை நிலையில் உள்ள எங்களுக்கு ஊரில் உள்ளவர் கள் உதவி செய்து நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத் துள்ளனர். தற்போது அந்த வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏனெனில் மரிக்கோவில் பகுதியில் இருந்து எங்களின் வீட்டிற்கு செல்லும் வழி மிகவும் மணல் நிறைந்து உள்ளதால் எங்க ளால் 3 சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கொதிக்கும் வெயிலில் சுடும் மணலில் தவழ்ந்து இருவரும் செல்ல வேண்டி உள்ளது. 


அந்த பகுதியில் பல வீடுகள் உள்ளதால் அனைவரும் பய னடையும் வகையில் மரிக் கோவில் முதல் எங்கள் பகு திக்கு புதிதாக ரோடுவசதி செய்து தரவேண்டும். பொது பாதை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment