(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 14, 2015

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்!!

No comments :

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தை மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏசி வகுப்பு முன்பதிவு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், ஏசி அல்லாத வகுப்பு முன்பதிவு காலை 11 மணி முதலும் நடைபெற உள்ளது. இந்த புதிய முறை ஜூலை 15 முதல் அமலுக்கு வர உள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு தற்போது, அனைத்து பெட்டிகளுக்கு தட்கல்' முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், டிக்கெட் கவுன்ட்டர்களிலும், ஆன்லைனிலும் நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்பதிவு நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



ஜூலை 15 முதல்:

அதன்படி, ஏ.சி. பெட்டிகளுக்கு, வழக்கம்போல் காலை 10 மணி முதல் 11 மணிவரை முன்பதிவு நடைபெறும். ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான முன்பதிவு நேரம், காலை 11 மணி முதல் 12 மணிவரை என மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த மாற்றம் ஜூலை15 முதல் அமலுக்கு வருகிறது. இது, டிக்கெட் கவுன்ட்டர், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் என இரண்டுக்கும் பொருந்தும்.

ஏஜெண்டுகளுக்கு 30 நிமிடம் தடை:

அதே சமயத்தில், சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிட நேரம், ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டு உள்பட அனைத்துவகை ஏஜெண்டுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதாவது, சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 மணி முதல் 8.30 மணிவரையும், தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணி முதல் 10.30 மணிவரையும், காலை 11 மணி முதல் 11.30 மணிவரையும் ஏஜெண்டுகள் எடுக்க முடியாது.

பாதி கட்டணம் வாபஸ்:

மேலும், உறுதி செய்யப்பட்ட தட்கல்' டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திருப்பித்தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, இந்த டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கூட்டநெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகத்தின் இணையதளத்தை பல்வேறு சேவைகளுக்காக அண்மையில் ஒரே நாளில் 3 கோடி பேர் அணுகினர். இதனால், அந்த இணையச் சேவை மிகவும் தாமதமானது. அதனால், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும்போது வேகமாக சேவை கிடைப்பதை உறுதிசெய்யவும், கவுண்ட்டர்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்தப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments :

Post a Comment