Wednesday, June 10, 2015
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் திட்டங்கள் தொடங்க ரூ.50 கோடி முதலீட்டில் இலக்கு நிர்ணயம்!! - கலெக்டர் நந்தகுமார்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.50 கோடி முதலீட்டில் தொழில் திட்டங்கள் தொடங்க இலக்கு
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் கூறினார்.
மாவட்டத்தில் வேளா ண் சார்ந்த வகையில்
உணவு பதப்படுத்துதல், பொறியியல்
நிறுவனங்கள், நெசவு, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், காகித தொழிலகங்கள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்கள், சூரிய ஒளிசக்தி உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்
நிறுவனங்கள் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு
தொழில் தொடங்க அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
உரிமம் மற்றும் அனுமதி பெறுவதில் உள்ள இடற்பாடுகள் தீர்க்கப்பட்டு மானியத்துடன் கூடிய தொழில் கடன் உதவிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன் சிட்கோ தொழிற்பேட்டைகளில் முன்னுரிமை இடஒதுக்கீடு செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உரிமம் மற்றும் அனுமதி பெறுவதில் உள்ள இடற்பாடுகள் தீர்க்கப்பட்டு மானியத்துடன் கூடிய தொழில் கடன் உதவிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன் சிட்கோ தொழிற்பேட்டைகளில் முன்னுரிமை இடஒதுக்கீடு செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில் வணிகத்துறையின் வழியாக
வழங்கப்பட்டு வரும் மாநில மூலதனம், வாட், மின்கட்டணம், பத்திரக்கட்டணம்
உள்ளிட்ட பல்வேறு மானியங்களையும் சலுகைககளையும் தொழில் முதலீட்டாளர்களுக்கு
விளக்கும் வகையில் சிறப்பு முகாம்களும், கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.இந்த அரிய வாய்ப்பை
பயன்படுத்த ஆர்வமுள்ள தொழில் முதலீட்டாளர்கள் தாங்கள் உத்தேசித்துள்ள தொழில், திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் மற்றும் தேவைப்படும் உதவிகள் குறித்த
விளக்கங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567230497
என்ற போனிலோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி: தினகரன்
No comments :
Post a Comment