Saturday, June 13, 2015
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறு, 171 பேர் உயிர் தப்பினர்!!
திருச்சியில் இருந்து ஏர் இந்தியா
எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (12-6-2015) அதிகாலை 5 மணிக்கு 165 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் துபாய்க்கு புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து
கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர
கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே, அருகில் உள்ள சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு
அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாரிகள், உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது மட்டுமின்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தனர்.
அதன்படி, காலை 6.15 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து
விமான நிலைய பொறியாளர் குழுவினர், விமானத்தில் இயந்திர கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், விமானம் நள்ளிரவில் புறப்படும் என கூறி, அதில் வந்த பயணிகளை கீழே இறக்கினர்.
விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனாலும் பயணிகள் திட்டமிட்டப்படி துபாய் போய் சேர முடியாததால் பலமணி நேரம் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனாலும் பயணிகள் திட்டமிட்டப்படி துபாய் போய் சேர முடியாததால் பலமணி நேரம் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
No comments :
Post a Comment