(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 11, 2015

ராமநாதபுரம் பகுதியில் ஜூன் 13 இல் மின்தடை!!

No comments :
துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ராமநாதபுரம் பகுதியில் ஜூன் 13 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
 ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், ஆட்சியர் அலுவலக வளாகம், பட்டினம்காத்தான்,சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


ராமநாதபுரம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட திருப்புல்லாணி, தெற்குத்தரவைஎம்.எஸ்.கே.நகர்,பசும்பொன்நகர்,கூரியூர்,காஞ்சிரங்குடி,புத்தேந்தல், வன்னிக்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
 ரெகுநாதபுரம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ரெகுநாதபுரம்,பெரியபட்டிணம்,முத்துப்பேட்டை,காரான், வண்ணான்குண்டு,தினைக்குளம்,உத்தரவை,சேதுக்கரை,தெற்குகாட்டூர்,நைனா மரைக்கான் பகுதிகளை  உள்ளடக்கிய கிராமங்களில் மின்தடை ஏற்படும்.
தேவிபட்டிணம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட காட்டூரணி,அண்ணா பல்கலை,பொட்டகவயல்,திருப்பாலைக்குடி,சிறுவயல், பெருவயல்,சித்தார்கோட்டை பகுதிகளை உள்ளிடக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
 ஆர்.காவனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட தொருவளூர்,முதலூர், கிளியூர்,தேத்தாங்கால் பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி: தனமணி

No comments :

Post a Comment