Thursday, May 14, 2015
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பயணச்சீட்டு மையம் ஏற்படுத்த MLA கோரிக்கை!!
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட மேலாளருக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள்
பயன்படுத்தி வருகின்றனர். மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில்
முக்கியமானது ராமநாதபுரம் ஆகும்.
இந்நிலையில் ராமேஸ்வரம்–மதுரை வழித்தடத்தில் காலை
மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் எண்: 56724 மற்றும் 56723 ஆகிய இரண்டு பயணிகள் ரயில்களை ராமநாதபுரம் நிலையத்தில் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் மேற்கண்ட நேரங்களில் பயணச்சீட்டு மையத்தில் கூட்ட நெரிசல்
ஏற்படுகிறது. பரபரப்பான முறையில் பயணச்சீட்டு எடுக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது.
இதனால் சில நாட்களுக்கு முன் விபத்தும் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.
எனவே ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் எண்: 56724 மற்றும் 56723
ஆகிய இரண்டு பயணிகள் ரயில்களுக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில்
கூடுதல் பயணச்சீட்டு மையம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
No comments :
Post a Comment