Thursday, May 7, 2015
ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனைத்து நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகளும்
புதன்கிழமை நகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில்
போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடைகள்
வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக
வந்த புகார்களின் பேரில் நகராட்சி ஆணையர் எஸ்.முகம்மதுசிராஜ் உத்தரவில் நகரமைப்பு
ஆய்வாளர் சரோஜா, சுகாதார அலுவலர்
சந்திரன், நகராட்சி
வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு
அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி
துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் அனைத்து நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகளும்
அகற்றப்பட்டன.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment