Sunday, May 3, 2015
சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரை நியமித்தார் மன்னர்!!
சல்மானின்
சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய பட்டத்து இளவரசராக
அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய
அரசரின் மகனான மொஹம்மது பின் சல்மான், பட்டத்து இளரசருக்கு அடுத்த நிலையில்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சவூதியின்
அரசராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து தற்போதைய அரசரான சல்மான் ஜனவரி
மாதத்தில் அரசராக முடிசூட்டப்பட்டார்.
முந்தைய
அரசரான அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 2005ஆம் ஆண்டிலிருந்து அரசராக இருந்துவந்தார். தற்போதைய அரசரான சல்மான் முந்தைய நிலையிலிருந்து சில
மாற்றங்களைச் செய்துவருகிறார்.
பட்டத்து
இளவரசராக இருந்த மோக்ரின் பின் அப்துல் அஜீஸ் உள்பட முந்தைய அரசருக்கு
நெருக்கமானவர்கள், ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
நயீஃப்
ஏற்கனவே அமெரிக்காவுடன் நல்ல உறவுகளை பேணிவந்தவர் என்பதால், அவர் இளவரசராக அறிவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா
வரவேற்கும்.
சவூதியின்
பாதுகாப்புத் துறைத் தலைவரான அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் போக்கைக்
கடைப்பிடித்துவந்தார். 2009ஆம் ஆண்டில் அல் – காய்தா அவரைக் கொல்ல முயற்சித்தது.
பட்டத்து
இளவரசருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கும் முகமது பின் சல்மான், அரச குடும்ப வரிசையில் தொடர்ந்து மேலேறிவருகிறார்.
ஜனவரி
மாதத்தில் அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏமனில் சவூதி
தலைமையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளை அவர்தான் தற்போது
மேற்பார்வையிட்டுவருகிறார்.
1975ஆம் ஆண்டிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சௌத்
எல் ஃபைசல், அந்தப்
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சவூதியின் அமெரிக்கத் தூதர் அடெல் ஜுபெய்ர்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரச குடும்பத்தைச் சேராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment