(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 19, 2015

நயினார்கோவில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே திங்கள்கிழமை 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.


அரசரடிவண்டல் கிராம சுடுகாட்டுப் பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நயினார்கோவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முகமதுசெரீப் அங்கு சென்று சடலத்தை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பிவைத்தார்.


இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment