(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 18, 2015

பாம்பன் பாலத்தில் ரயில் படியில் நின்று வேடிக்கை பார்த்தவர் கீழே விழுந்து பலி!!

No comments :
மதுரையிலிருந்து நேற்று அதிகாலை ராமேஸ்வரம் கிளம்பிய பாசஞ்சர் ரயிலில் தென்காசியை சேர்ந்த இசக்கி (24) உள்பட 37 பேர் தீர்த்தமாடுவதற்காக சென்றனர். பாம்பன் பாலத்தில் ரயில் சென்றபோது படியில் நின்று வேடிக்கை பார்த்த இசக்கி, திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்தார். உடன் வந்தவர்கள் இதை கவனிக்கவில்லை. ராமேஸ்வரம் ஸ்டேஷனில் ரயில் நின்றபின்பு இசக்கியோடு வந்திருந்த அனைவரும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர். பின்னர் கோயிலுக்கு புறப்பட்டபோது இசக்கி இல்லாததை கண்டுபிடித்தனர்.


அவரை காணவில்லை என ராமேஸ்வரம் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதற்கிடையே பாம்பன் கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக மண்டபம் மரைன் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் ராமேஸ்வரம் கோயில் போலீசாரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த உறவினர்கள் காணாமல் ேபான இசக்கி உடல் என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினகரன்

No comments :

Post a Comment