Thursday, May 28, 2015
மதுவுக்கு எதிரான மாணவர்ப்போராட்டம் – சகோதரி நந்தினி அறிக்கை!!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கால்
பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைவரது ஒத்துழைப்பையும்
வேண்டுகிறோம்.
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடியால் அப்பாவை பறிகொடுத்த மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். மேலும் குடியால் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளால் படிப்பு பாதிக்கப்பட்டு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை பெரும்பாலான மாணவர்கள் சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாது பள்ளி மாணவர்கள் கூட குடிபோதைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு நேரடியாகவும்
மறைமுகமாகவும் தொடர்பு வைத்துள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு டாஸ்மாக்கை
ஒழித்துக்கட்டும் அளவுக்கு தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் இல்லை.
மொத்தத்தில் அடுத்த தலைமுறையைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மாணவர்
சக்தி முழு ஆற்றலோடு போராட்டக்களத்தில் இறங்கினால் மட்டுமே டாஸ்மாக் கடைகளை
ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும். எனவே டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களை
ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
01.06.2015 முதல் இப்பணியை தீவிரப்படுத்த உள்ளோம்.
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் சாதி,மதம்,கட்சி போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து
இம்முயற்சியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்-
இப்படிக்கு,ஆ.நந்தினி,சட்டக்கல்லூரி மாணவி மதுரை-9750724220
No comments :
Post a Comment