Tuesday, May 5, 2015
கீழக்கரை அருகே கோவில் நகையை திருடிய 3 நபர்கள் கைது!!
கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில்
சாமி சிலையில் ஒரு பவுன் தாலி சங்கிலியை திருடிய 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை அருகே
சின்னமாயாகுளம் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் சாமிக்கு
அணிவித்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலி திருடு போனது. இது குறித்து கிராமத் தலைவர்
நாகலிங்கம் மகன் முனியாண்டி (65) ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏர்வாடி
பகுதியில் காவல் ஆய்வாளர் பால்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் தங்கசாமி, கோட்டைச்சாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது
சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிநோக்கம் மீனவர் காலனி செய்யது (24),
ஹாஜாமுகைதீன் (28),
தெளலத்கான் (26)
ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது இவர்கள் கோயில் சிலையில் தங்கத் தாலி சங்கிலியை திருடி இருந்தது
தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த போலீஸார்
3 பேரையும் கைது
செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment