(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 18, 2015

உம்ரா புனிதப்பயணம் முடித்து துபாய் திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானது!! 3 இந்தியர்கள் பலி, 53 பேர் காயம்!!

No comments :

அபுதாபி: துபாயை சார்ந்த இந்தியக் குழு ஒன்று சவுதி அரேபியாவில் உம்ராவை முடித்து விட்டு சனிக் கிழமை அமீரகத்தை நோக்கி பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த பேருந்து அல் குவைஃபாத் – அபுதாபி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது இதில் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர் மேலும் 44 பேர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர் .


விபத்தில் இறந்த மற்றும் காயமுற்ற அனைவரும் உம்ரா செய்துவிட்டு திரும்பியவர்கள் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.



பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர உலோகத் தடுப்பில் மோதி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சனிக்கிழமை (16.05.2015) மாலை 3.30 மணியளவில் விபத்து நடந்த சிறிது நேரத்தில் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் ஆகாய மார்க்க மீட்புக் குழுவும் அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்களும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று அவசர கால உதவிகளை மேற்கொண்டு காயமடைந்தோருக்கு அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளித்து வருவதாக உள்துறை அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து துறை தலைவர் கலோனல் ஹமத் நஸீர் அல் பெலூசி தெரிவித்தார்.



ஓட்டுநரின் அதிக நேர வேலைப் பளுவின் அழுத்தமும் கவனக்குறைவும் பேருந்தின் டயர் வெடிப்புமே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.



கனரக வாகன ஓட்டிகள் கவனமாகவும், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் மேலும் வேகக் கட்டுப்பாடுகளின் படியும் வாகனம் ஓட்ட வேண்டுமென கலோனல் அல் பெலூசி தெரிவித்தார். தரமான டயர்களையும் நெடுஞ்சாலைகளில் செல்லும் முன்பும் வாகனத்தின் டயர்களை பரிசோதித்து செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநரும் மரணமடைந்தார்.







இரண்டு ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த அந்த பேருந்தில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளனர் .



காயமடைந்த 53 பேரில் யாரும் ஆபத்தான கட்டத்தில் இல்லை என பாதிக்கப் பட்டோருக்கான உதவிகளை செய்துவரும் இந்திய சமூக சேவகரான கே.வி.செரீப் தெரிவித்தார்.



விபத்தில் பலியான இரண்டாமவர் 46 வயது நிறைந்த M.அபுபக்கர் உம்ரா பயணத்திற்கான கோ ஆர்டிேனேட்டர் ஆவார். இவர் மெசெஞ்சராக குடியுரிமை மற்றும் வெளிவிவகாரத்துறையில் 2007 முதல் பணி புரிந்துள்ளார்.



மரணமடைந்த மூன்றாமவர் 41 வயதுடைய கல்லரக்கள் முகமது இந்த வேராக் குழுவின் தலைவர் ஆவார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.இவர் X-ray டெக்னீசியனாக துபை ரஷீத் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.



இந்த குழு மே மாதம் 6ம் தேதி துபையில் இருந்து உம்ராவுக்கு புறப்பட்டது. விபத்து நிகழாமல் இருந்தால் சனிக்கிழமை மாலை துபாய் திரும்பியிருப்போம் என அபுபக்கர் தெரிவித்தார்.



மரணமடைந்தோரின் உடல்கள் மதினத்துள் ஜயாத் மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின் ஷேக் கலிஃபா மெடிக்கல் சிட்டிக்கு ஞாயிரு இரவு கொண்டு செல்லப் பட்டது.



அரசு நடைமுறைகள் முடிந்து விட்டால் திங்கள் கிழமை அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்தோர் அல்மப்ராக் மற்றும் மதீனத் ஜயாத் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். பெரும்பாலோனோர் ஞாயிறு மாலையே சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டனர். காயமுற்ற ஒரு வயது குழந்தை அல் அய்ன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment