(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 23, 2015

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார்!!

No comments :
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.


அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் துறை விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்கள் 14, 14 பேராக ஒரே நேரத்தில் பதவியேற்றனர்.

28 அமைச்சர்களும் துறைகளும்: 

ஜெயலலிதா- உள்துறை, காவல் 
ஓ. பன்னீர்செல்வம்-நிதி, பொதுப்பணித் துறை 
நத்தம் விஸ்வநாதன்-மின்சாரத் துறை, மதுவிலக்கு 
வைத்திலிங்கம்- வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்துறை 
எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலை, வனத்துறை
மோகன்- ஊரகத் தொழில் துறை 
வளர்மதி -சமூக நலம் 
பழனியப்பன் -உயர் கல்வித் துறை 
செல்லூர் ராஜூ- கூட்டுறவுத் துறை 
காமராஜ்- உணவு, இந்து சமய அறநிலைத் துறை 
தங்கமணி- தொழில்துறை 
செந்தில்பாலாஜி- போக்குவரத்துத் துறை 
எம்.சி. சம்பத்- வணிகவரி 
எஸ்.பி.வேலுமணி- நகராட்சி நிர்வாகம் 
டி.கே.எம்.சின்னையா- கால்நடைத்துறை 
கோகுல இந்திரா- கைத்தறித் துறை 
சுந்தரராஜ்- இளைஞர் நலம் 
சண்முகநாதன்- சுற்றுலாத்துறை 
என். சுப்பிரமணியன்- ஆதி திராவிடர் நலத்துறை 
கே.ஏ. ஜெயபால்- மீன் வளம் 
முக்கூர் சுப்பிரமணியன்- தகவல் 
தொழில்நுட்பம் உதயகுமார்- வருவாய்த் துறை 
ராஜேந்திரபாலாஜி- செய்தி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை ரமணா- பால்வளம் 
வீரமணி- பள்ளிக் கல்வித்துறை 
தோப்பு வெங்காடசலம்- சுற்றுச் சூழல்துறை 
பூனாட்சி - காதி, கிராம தொழில்கள் வாரியம் 
அப்துல் ரஹீம் - பிற்பட்டோர், சிறுபான்மை நலன் 
விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத் துறை


செய்தி: ஒன் இண்டியா

No comments :

Post a Comment