Thursday, April 30, 2015
ஆற்றாங்கரை கிராமத்தில் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார்!!
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றாங்கரை கிராமத்தில் உள்ள காந்தி நகர் பகுதிக்கு சென்று மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்கள் அப்போது பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்து ஆவண செய்யப்படும் என்று கூறினார்கள்.
ஆற்றாங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் அஸ்மத் அலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கிய மனுவில் ஆற்றாங்கரை ஊராட்சியில் காந்தி நகரில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றார்கள்.
அனைவருக்கும் பயன்தரும் வகையில் தாங்கள் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா உடன் இருந்தார்.
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்
No comments :
Post a Comment