Tuesday, April 21, 2015
நகை திருட்டு - கீழக்கரையைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது!!
கீழக்கரை அருகே ஆசிரியை வீட்டில் நகை
திருடிய வழக்கில் 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஏர்வாடி அருகே உள்ள புதுமாயாகுளம்
பகுதியை சேர்ந்தவர் கனகசபை மனைவி சுந்தரம்பாள். ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது
வீட்டுக்குள் கடந்த 4.5.2014 அன்று மர்மநபர்கள் புகுந்து 10 பவுன் நகைகளையும் ரூ.20 ஆயிரம் பணத்தையும் திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
(File photo)
இதுகுறித்து ஏர்வாடி போலீஸார் வழக்குப்
பதிந்து கீழக்கரை எஸ்.என். தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் முஹம்மது கானை
கைது செய்து நகைகளை கைப்பற்றினர்.
அவர் அளித்த தகவலின் பேரில் மாயாகுளத்தை
சேர்ந்த காஜா நஜ்முதீன் மகன் சேக்அலாவுதீன் (28), கீழக்கரை புதுத்தெரு நவாஸ்கான் மகன் செய்யது சாகுல்ஹமீது (25)
ஆகிய இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை இவர்கள்
இருவரையும் மாயாகுளம் பகுதியில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான
போலீஸார் சென்று கைது செய்தனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment