(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 8, 2015

மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

No comments :


மதுரை விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை எண் 49-, மதுரையிலிருந்து ராமேஸ்வரம்-தனுஷ்கோடி வரை 4 வழிப்பாதையாக்கிட ரூ.828 கோடி நிதி ஒதுக்க மத்திய சாலைப் போக்குவரத்துக் கழகம் அனுமதியளித்தது.

அச்சாலையானது, மொத்தம் 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு 40 கிலோ மீட்டர் தூரம் புறவழிச் சாலைகளாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகியவற்றில் புறவழிச்சாலை அமைக்கவும் முடிவானது. திட்டம் 48 கிராமங்கள் வழியாகச் செயல்படுத்திட நிலம் கையகப்படுத்தப்பட்டன.



ஆனால், மதுரை விரகனூர், சிலைமான், புளியங்குளம் பகுதிகளில் சாலை விரிவாக்கத்தால் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு அப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆகவே, சாலை அமைக்க 45 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டும, 3 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை.  
தற்போது சாலைத் திட்டத்தின் வழி மாற்றப்பட்டுள்ளது. மாற்றுத் திட்டத்தின்கீழ், மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை அருகே நெடுஞ்சாலை தொடங்க உள்ளது. அதன்படி, முந்தைய திட்டத்தில் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரமானது 7.1 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய திட்டத்தில் 2 ரயில் மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்துக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ. 1400 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

No comments :

Post a Comment