Sunday, April 12, 2015
தேசிய ஜூனியர் கேரம் போட்டி: ராமநாதபுரம் மாணவருக்கு தங்கப்பதக்கம்!!
தேசிய அளவிலான ஜூனியர் கேரம்
சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ்பாபு தங்கப்பதக்கம்
பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருப்பதாக மாவட்ட கேரம் சங்கத் தலைவர்
செல்லத்துரை அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து
அவர் மேலும் கூறியதாவது:
மகாராஷ்டிர
மாநிலம் நாக்பூரில் கடந்த 28.3.2015 முதல் 31.3.2015 வரை தேசிய ஜூனியர் கேரம் சாம்பியன் ஷிப் போட்டிகள்
நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு அணிக்காக ராமநாதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீரர் எஸ்.தினேஷ்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டு
விளையாடினார். தமிழக அணி இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேச அணியை மூன்றுக்கு
இரண்டு என்ற விகிதத்தில் வீழ்த்தி தங்கம் வென்றது.
தமிழகத்துக்கும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தமைக்காக
ஆட்சியர் க.நந்தகுமார் தினேஷ்குமாரை பாராட்டினார் என்று அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கேரம் சங்கச் செயலர்
அ.சிவக்குமார், மாவட்ட
விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன், மாநில கேரம் போட்டி நடுவர்கள் கண்ணன்,
உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment