Monday, April 13, 2015
ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாநில விளையாட்டுப் போட்டிகள்!!
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி
விளையாட்டரங்கில் ஏப்.17,18,19 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற
உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ்
ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
(கோப்பு படம்)
மாநில மாற்றுத் திறனாளிகளுக்கான
விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளன. இதனை
முன்னிட்டு விளையாட்டரங்க சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர்
எஸ்.சுந்தரராஜ் மேலும் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளில் பார்வையற்றவர்கள்,
காது கேளாதவர்கள்,
உடல் ஊனமுற்றவர்கள்,
மனவளர்ச்சி குன்றியோர் என 4
வகைப்பட்டவர்களுக்கும் தனித்தனியாக
போட்டிகள் நடத்தப்படும். மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக விளையாட்டரங்கம் அருகில்
உள்ள பள்ளங்களில் மண் நிரப்பப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் வசதியாக நடந்து
வரவும் கூடுதல் வாகனங்கள் நிறுத்தவும் பட்டினம்காத்தான் ஊராட்சித் தலைவர் சித்ரா
மருது தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாற்றுத் திறனாளிகள் ஏறிச் செல்ல வசதியாக
படிக்கட்டுகள் உள்ள இடங்களில் சாய்தளங்களும், செயற்கைப் புல் தரைகளும் அமைக்கப்படுகின்றன.
இதனை முன்னிட்டு சீதக்காதி சேதுபதி
விளையாட்டரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு
பெற்றுள்ளது.
விளையாட்டங்கம் எதிரில் உள்ள
வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானம் ரூ.3.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என அவர்
தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வின் போது முதுகுளத்தூர்
நிலவள வங்கித் தலைவர் ஆர்.தர்மர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் உள்ளிட்ட
பலர் உடன் இருந்தனர்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment