(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 19, 2015

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம் !!

No comments :
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏழை மாணவர்களிடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2010-11 கல்வியாண்டில் அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள அரசு உதவிபெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களை www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 15 நாள்களுக்குள், பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: திரு.ஹிதாயத், துபாய்

No comments :

Post a Comment