Thursday, April 30, 2015
பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம்?!!
(கோப்பு படம்)
சர்வதசே விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அது
தோல்வியடைந்து தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழுந்து
கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம்,
ஒவ்வொரு 5 விநாடிக்கு
ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் எம் 27 எம் என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலமானது பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமைதான் விண்ணுக்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது அந்த விண்கலம் வேகமாக கீழே வந்து கொண்டிருக்கிறது. அதன் வேகத்தைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விண்கலம் 5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள விண்கலத்துக்கான செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்துக்கு அருகே 44 வகையான சிதறல்கள் இரு்ப்பதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த சிதறல்கள், விண்கலத்திலிருந்து வந்தவையா அல்லது வேறா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்ட் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ‘ரஷ்ய விண்கலம் மெதுவாக பூமியை நோக்கி விழும் என்று நான் நம்புகிறேன். மேலும் அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்ததுமே எரிந்து சாம்பலாகி விடும். அதன் சிதறல்கள்தான் பூமிக்கு வரும்' என்று கூறியுள்ளார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவர்.
இதற்கிடையே, இந்த விண்கலத்தின் கதி என்ன எந்பது குறித்து நாசா உறுதியாக எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. இதுபோன்ற சப்ளை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது பூமிக்கு வரும் வழியிலேயே சிதறுண்டு போவது வழக்கமானது தான் என்பதால் நாசா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை நாசா செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி ஷியர்ஹோல்ஸும் ஆமோதிக்கிறார்.

No comments :
Post a Comment