(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 13, 2015

கத்தாரி்ல் ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு தரும் இந்திய உணவகம்!!

No comments :

கத்தார் இன்டஸ்டிரியல் ஏரியாவில் ஓட்டல் நடத்திவரும் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் கடைக்கு வரும் சில ஏழைத் தொழிலாளர்கள் சாப்பாடு சாப்பிட பணம் இல்லாததால் ரொட்டி வாங்கி தண்ணிரில் நனைத்து சாப்பிடுவதைப் பார்த்து மனம் வருந்தி கடை வாசலில் எழுதி வைத்து விட்டார். பணம் இல்லையென்று வருத்தப்பட வேண்டாம்.


பசியெடுத்தால் தாராளமாக சாப்பிடவும் பணம் வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டார் “ஜைகா ரெஸ்டாரண்ட்” நிறுவனர் “ஷதாப் கான்.


தினம் இரண்டு அல்லது மூன்று ஆட்கள் வந்து சாப்பிடுகிறார்களாம்.
பெரும்பாலும், இந்தியா, நேபால், பங்களாதேஷ் கட்டுமான தொழிலாளர்களே இவருடைய இந்த சேவையை பயன்படுத்திக்கொள்கிறார்களாம்

இலவசமாக சாப்பிட வெட்கப்படுபவர்களுக்காக இனி முதல் வெளியில் ப்ரிட்ஜில வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தேவையுள்ளவர்கள. எடுத்துக் கொண்டு போகத்தான் இந்த ஏற்பாடு.

வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

செய்தி: கல்ஃப் நியூஸ்


No comments :

Post a Comment