(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 25, 2015

சற்றுமுன்: டெல்லியிலும் உணரப்பட்ட நேபாள் நிலநடுக்கம்!!

No comments :
நேபாள நாட்டில் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் பயங்கர சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிர்வுகள் ஏற்பட்ட உடன் உடனடியாக காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதில் பயங்கர சேதம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நேபாளம் முழுவதும் செல்போன் சேவை முடங்கிப் போனது. இந்நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.


No comments :

Post a Comment