(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 16, 2015

ஏர்வாடியில் வீடு புகுந்து திருட்டு!!

No comments :
கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகீம் மகன் அப்பாஸ் (42). இவர் ஏர்வாடி தண்ணீர் பந்தல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கம் போல் இவர் புதன்கிழமை வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி அருகில் உள்ள தர்காவுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டாராம். அப்போது இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து கைப் பையில் இருந்த 7 கிராம் சங்கிலி, ரூ.2000 ரொக்கம் மற்றும் ஒரு செல்லிடப் பேசி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டாராம்.  இது குறித்து அப்பாஸ் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் பால்பாண்டி வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment