(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 15, 2015

பனைக்குளத்தில் த.மு.மு.க. சார்பில் நலத் திட்ட உதவிகள்!!

No comments :
பனைக்குளத்தில் த.மு.மு.க. சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச் சிக்கு த.மு.மு.க. முன்னாள் தலைவர் பரக்கத்துல்லா தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாசலீம், பொருளாளர் ரகுமத்துல்லா, ஆசிக், ஹஜ்ஜீர் ரகுமான், ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் பனைக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவ உதவி தொகையும், மேலும் 2 ஏழை பெண்களுக்கு தேங்காய் துருவலுடன் கூடிய கிரைண்டர் எந்திரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நசீம்கான், அப்துல் அலி, ஹபீக் கமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment