Monday, April 13, 2015
தண்ணீர் கட்டணம் தொடர்பான கீழக்கரை நகராட்சி அறிவிப்பு!!
கீழக்கரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய
குடிநீர் இணைப்புக்கான நிலுவை கட்டணத்தை செலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு
துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை நகராட்சியில் 21
வார்டுகள் உள்ளன. இவற்றில் வீட்டு
குடிநீர் உபயோகத்துக்காக 768 இணைப்புகள் உள்ளன. பல மாதங்களாக நகராட்சிக்கு
செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் ரூ.8
லட்சம் வரை உள்ளது. ஆகவே ஒரு மாத
காலத்துக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்தார்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment