(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 11, 2015

ராமேஸ்வரத்துக்கு, மதுரை- மானாமதுரை- பரமகுடி-ராமநாதபுரம் வழியாக சிறப்பு இரயில்!!

No comments :



ராமேஸ்வரத்துக்கு பெங்களூருவிலிருந்து சேலம், மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குகிறது தென்மேற்கு ரயில்வே. இதுகுறித்த செய்திக்குறிப்பு: ரயில் எண் 06545-யஷ்வந்த்பூர்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 12, 19, 26, மே, 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை), காலை, 8.30 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 10.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.



ரயில் எண் 06546-ராமேஸ்வரம்-யஷ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20, 27, மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1ம்தேதி ஆகிய திங்கள்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயிலில் 1 ஏசி சேர் கார், 8 இரண்டாம் வசதி சேர்கார், 5 பொது பெட்டி மற்றும் லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கேஆர்புரம், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் வழியாக ராமேஸ்வரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான புக்கிங் ஏப்ரல் 11ம்தேதி, சனிக்கிழமை-இன்று முதல் தொடங்குகிறது.


No comments :

Post a Comment