Wednesday, April 1, 2015
ராமநாதபுரத்தில் வருமான வரி சேவை மையம்!!
ராமநாதபுரத்தில் வருமான வரி செலுத்துவோரின் சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டது.ராமநாதபுரம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வரி செலுத்துவோர் சேவை மையம் துவக்க விழா நடந்தது. மதுரை வருமான வரி கமிஷனர் பரத் தலைமை வகித்து மையத்தை துவங்கி வைத்தார். காரைக்குடி சரக இணை கமிஷனர் இயாஸ் அகமது முன்னிலை வகித்தார். செய்யது அம் மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, டாக்டர் அரவிந்தராஜ், டாக்டர் ஜோசப்ராஜன், ராமநாதபுரம் வர்த்தக சங்க தலை வர் ஜெகதீசன், செயலாளர் குப்தா கோவிந்தராஜ், பொருளாளர் செல்வராஜ், நகை வியாபாரிகள் வாசுதேவன், பார்த்திபன் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரி அலுவலர் சண்முகநாதன், ஆய்வாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கமிஷனர் பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் வரி செலுத்துவோர் சேவை மையங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசு திட்டங்கள் சென்றடையாது. மக்கள் தானே முன்வந்து வரி செலுத்தினால் தான் நாடு வளர்ச்சி அடையும். நாட் டின் வளர்ச்சிக்காக மக்கள் வரி செலுத்த வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தாமல் வரி வசூல் செய்ய வேண்டும். கஜானா காலி என்றால் நாடே காலி என சாணக்கியர் சொல்லியுள்ளார். அதனால் கஜானா சரியாக இருக்க வரி செலுத்துவது முக்கியம். தூத்துக்குடி ராமநாதபுரத்தை இணைக்கும் வகையில் பல்வேறு தொழிற்திட்டங்கள் வர உள்ளன.
சேது சமுத்திர திட்டம் இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கெல்லாம் அரசிடம் பணம் இருந்தால்தான் செயல்படுத்த முடியும். முறையாக வரி செலுத்துபவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும். அனைவரும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும் என்றார். வரி செலுத்துவோர் சேவை மையம் மூலம் ஆன்லைனில் வரி செலுத்துதல், பான்கார்டு பெறுதல் உள்பட பல்வேறு வருமான வரித்துறை சேவைகளை பெறலாம். ராமநாதபுரம் வருமான வரி அதிகாரி ஆண்டி நன்றி கூறினார்.
படம்: தினதந்தி
No comments :
Post a Comment